காமல் இருக்கிறாள். நம்மைச் செறித்துவைத்திருக்கும் அன்னை உறங்கினாலும், உறக்கம் அற்ற கண்களை உடைய ஊர்க்காவலர் ஊரைச் சுற்றிக் காவல் காத்து வருகின்றனர். வேல் ஏந்திக் காவல்புரியும் அவ்விளையர்உறங்கினாலும், வலப்பக்கமாகச் சுருண்ட வாலை உடைய நாய்கள் குரைக்கின்றன. நாய்கள குரைத்தலைத் தவிர்த்து உறங்கினாலும், வானத்தில் திங்கள் பகலைப் போலத் தன் கிரணங்களை வீசி மிகுந்த ஒளியைச் செய்யும். திங்கள் மலையைச் சேர்ந்து மறையின், எலியை இரையாகக் கொள்ளும் வலிய அலகினை உடைய கோட்டான் பேய்கள் திரியும் நடுஇரவில் அஞ்சுதல் உண்டாக ஒலிக்கும். வளைந்த கண்களை உடைய கோட்டான்கள் அமைதியுற்றால், வீட்டில்உள்ள கோழிகள் வைகறையாமத்தின் வரவு காட்டிக் கூவும். இவையாவும் நிகழாத நாள் ஒன்று உண்டாயின், உறுதியில்லாத மனத்தை உடைய தலைவன் வருதலைச் செய்யான். அதனால் மதில் காவலை உடைய தித்தன் வாழ் உறையூரின்கண் கற்கள் முதிர்ந்த வெளியிலுள்ள காவற்காடு கடத்தற்கு அரிய பலமுட்டுப் பாடுகளை உடையதாய் இருப்பதுபோல, நம் இரவுக்குறியும் நிகழ்த்துதற்கு அரிய பல முட்டுப்பாடுகளை உடையதாய் உள்ளது.]
தலைமகன்ஊர்க்குச் செலவு ஒருப்படுதல்:
அருங்கடி அன்னை காவல் நீவிப்
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்
பகலே பலரும் காண நாண்விட்டு
அகல்வயின் படப்பை அவன்ஊர் வினவிச்
சென்மோ வாழி தோழி பன்னாள்
கருவி வானம் பெய்யாது ஆயினும்
அருவி ஆர்க்கும் கழைபயில் நனந்தலை 60
|
|
|
|