476                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     கவின் அழிபு உரைத்தல்:

  மின்னே அவர்தந்த வேட்கையை மீட்கும் விரகுஅறிய
  முன்னே தவங்கள் முயன்றில மேமுன்செய் தீவினையால்
  என்னே அருங்கவின் எல்லாம் எனக்கும் அவர்க்கும்இன்றிக்
  கொன்னே பசலை திருந்தஇவ் வாறு குறைக்கின்றதே. 

         அம்பி. 245 

 எனவும்,

     [மின்போன்ற தோழியே! முற்பிறப்பில் செய்த தீவினையால் என்
 அழகிய வனப்பு எனக்கும் அவருக்கும் பயன்படாமல் போமாறு, பசலை
 பாய்தலால் இவ்வாறு நாளும் குறைந்து வருகின்றதே. அவர் தந்த
 காமவிருப்பத்தை மீட்டும் நீக்கிக் கொள்ளும் உபாயத்தை அறிய
 முற்பிறப்பில் தவங்கள் செய்யாது போய்விட்டோமே!]

     தன்துயர் தலைவற்கு உரைத்தல் வேண்டல்:

     இன்னள் ஆயினள் நன்னுதல் என்றுஅவர்த்
     துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
     நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
     நீர்வார் பைம்புதல் கலித்த
     மாரிப் பீரத்து அலர்சிலர் கொண்டே.

                     குறுந். 98 

 எனவும்,

     [தோழி! நம் மனைக்கொல்லையில் நீர் நிரம்பிய பசிய புதரில் செருக்கி
 வளர்ந்த மாரிக்காலத்துப் பீர்க்கம்பூக்கள் சிலவற்றைக் கொண்டு சென்று
 "தலைவியின் நெற்றி இவ்வாறு பசலை பாய்ந்துவிட்டது" என்று அவரை
 அடைந்து அவரிடம் கூறுவார் உளராயின், அக்கூற்றுப் பெரும்பயன் தரும்.]

     பாங்கி நின்குறை நீயே சென்று உரை என்றல்:

  தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
  நாம்ஆ தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்