வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகிலர் ஆயின்என் நாம்சொல்லும் தன்மைகளே. திரு. 263
எனவும்,
[ஒட்டுமாம் பொழில்கள் நிறைந்த சிற்றம்பலத்தில் தேவர் வணங்கவும்
நாம் விரும்பவும் நடனம் ஆடும் சிவபெருமானை அடையாதவர் போல வருந்தும் நம் அல்லலை நம் தலைவர் தாமாக அறியாராயின், நாம் சொல்லுவதனால் யாது பயன் நிகழும்? அவரோ பலகலைகளிலும் பேரறிவு படைத்தவர், அவர் மனமே இதுவாயின், யாம் செயற்பாலது யாது?]
தலைமகள் அலர்பார்த்து உற்ற அச்சக்கிளவி:
அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரம்கரத்தால்
அலர்ஆர் கழல்வழி பாடுசெய் தாற்குஅளவு இல்ஒளிகள்
அலரா இருக்கும் படைகொடுத்தோன் தில்லையானருள்போன்று
அலராய் விளைகின்றது அம்பல்கைமிக்குஐய மெய்அருளே. திரு. 180
எனவும்,
[ஐய! ஆயிரம்தாமரைகளை அருச்சித்துத் திருமால் ஆயிரம் கைகளால்
தன் திருவடிகளில் வழிபாடுசெய்ய, ஒளிமிகும் சக்கரத்தைக் கொடுத்த தில்லைப் பெருமான் அருள்போன்று, உன் அருள் அம்பலாய் முகிழ்முகிழ்க்கப்பட்டிருந்த நிலையைக் கடந்து அலராய் ஊர் எங்கும் பரவிவிட்டது]
தலைமகள் ஆறுபார்த்து உற்ற அச்சக்கிளவி:
தார்உறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை
நீர்உறு கான்யாறு அளவில நீந்திவந் தால்நினது
போர்உறு வேல்வயப் பொங்குஉரும் அஞ்சுக அஞ்சிவரும்
சூர்உறுசோலையின் வாய்வரற்பாற்று அன்று தூங்குஇருளே. திரு. 176
|
|
|
|