478                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     [ஐய! கொன்றைமாலை சூடிய சிவபெருமானின் கயிலையிலே நீர்மிக்க
 காட்டாறுகள் பலவற்றை நீந்திவந்தால், உன் வேலைக்கண்டு இடி
 வேண்டுமாயினும் அஞ்சும். பலரும் அஞ்சிக்கொண்டு வழிநடக்கும், தீண்டி
 வருந்தும் தெய்வங்கள் உடைய இச்சோலை செறிந்த இருளில் வரும்
 தகுதி உடையது அன்று.]

     காமம் மிக்க கழிபடர் கிளவி:

  மாதுஉற்ற மேனி வரைஉற்ற வில்லிதில் லைநகர்சூழ்
  போதுஉற்றபூம் பொழில்காள் கழிகாள்எழில் புள்ளினங்காள்
  ஏதுஉற்று அழிதிஎன்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்குஇவர்ஓர்
  தீதுஉற்றது என்னுக்கு என்னீர்இதுவோ நன்மைசெப்புமினே. 

       திரு. 174 

 எனவும்,

     [பார்வதிபாகனாகிய மேருமலையை வில்லாக உடைய
 சிவபெருமானுடைய தில்லை நகரைச் சூழ்ந்த பொழில்காள்! கழிகாள்!
 பறவைகாள்! ?யாது காரணம் பற்றி வருந்துகிறாய்?? என்று கேட்கும்
 எண்ணம் உடையீர் அல்லீர். தலைவனிடம் ?இவர்கள் துன்புறுவது்
 எதன்பொருட்டு?? என்று வினவகில்லீர். நீங்கள் உங்களோடு பழகிய
 எங்களுக்குச் செய்யக் கூடிய நன்மை இதுவோ? சொல்லுங்கள்.]

     தலைவி தன்னுள் கையாறு எய்திடு கிளவி:

  விண்தலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் அம்கழிசூழ்
  கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்க்
  கண்டிலை யேவர கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும்
  மண்டில மேபணி யாய்தமி யேற்குஒரு வாசகமே.  

              திரு. 177 

 எனவும்,

     [தேவாதிதேவராம் சிவபெருமானுடைய தில்லையை ஒட்டிய
 உப்பங்கழிகளை அடுத்த கண்டல்புதர்களே சாட்சியாகப் புன்னைமர
 நிழலில் என்னைக் கூடிய தலைவர் வந்த