தனை, இரவு முழுதும் வானத்தில் இருந்து ஒளி வீசும் மதி மண்டிலமாகிய நீ கண்டாய் அல்லையோ? தனித்து வருந்தும் எனக்கு
ஒரு மறுமாற்றம் தருதல் ஆகாதோ?]
தலைமகள் நெறி விலக்குவித்தல்:
ஒருநாள் வரினும் உயர்பழி தூற்றும் உயர்சிலம்பில்
வருநாள் பலஉண்டு மாமலை நாடர் வரநினையும்
பெருநாள் ஒழிய இனிவரில் ஏதம் பிறக்கும்என்று
குருநாள் மலர்க்குழலாய்மொழி நீசென்று கொற்றவர்க்கே. அம்பி. 252
எனவும்,
[நிறமுடைய அன்றலர்ந்த மலர்சூடிய கூந்தலைஉடைய தோழி! ஒருநாள் நம்மை நினைத்துக் குறியிடத்து வந்தாலும் மிக்க பழி தூற்றும் இம்மலையில் இதற்குமுன் பலநாள்கள் குறிவாய்ப்ப வந்துபோன கொற்றவனுக்கு இனி, நம் மலைநாடர் அவன் வரவைக் கருதும் திருமணநாளை விடுத்து வேற்றுநாளில் வரின் அவனுக்குத் தீங்கு நிகழும்என்பதனை நீ சென்று சொல்லுவாயாக.]
குறி விலக்குவித்தல்:
வளைவாய்ச் சிறுகிளை விளைதினை கடியச்
செல்கஎன் றாளே அன்னை சேண்எனச்
சொல்லில் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை உழந்த
குறுங்கை இரும்புலிக் கொலைவல் ஏற்றைப்
பைங்கண் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர்இருள் நடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனினே. குறுந். 141
|
|
|
|