அகத்திணையியல்-நூற்பா எண்-149                         481


 

     [நொதுமலர் வரைதல்வேண்டி எமரிடம் அனுப்புவாரும் மகட்கேட்டுச்
 செல்வாரும் பலராய் உள்ளனர். புலியூரில் உள்ள சிவபெருமானுடைய
 அன்பர்களைப் போல இன்பப் புணர்ச்சிகளை மனம் உருகுமாறு அளித்து,
 என் உயிரைக் கொண்டு தாம் செல்லும்போது் என் நெஞ்சில் தம்மை
 இருத்திச் சென்ற தலைவர் யாது செய்வதாக இன்று எண்ணம்
 கொண்டுள்ளாரோ? விரைவில் அவர் என்னை மணம் செய்து கொள்வதற்கு
 ஆம்வகை முயலுவாயாக.]

     குரவரை வரைவு எதிர்கொள்ளுவித்தல்:

  போற்றும் தினைவிளை யும்புனம் சாரல் புகர்முகத்துச்
  சீற்றம் சிறந்த களிற்றுஉரு வாய்நம் மைத்தேடிவந்த
  கூற்றம்கடிந்த நம்கோமான்வரைவு எதிர்கொள்ளும் வண்ணம்
  சாற்றும் திறம்என் கோலோதைய லாய்நம் தமர்களுக்கே.

         அம்பி. 258 

 எனவும் வரும்

     [தோழி! தினைவிளையும் புனத்திலே ஆண்யானை வடிவில் நம்மைக்
 கொல்ல வந்த யமனைவெருட்டிய நம்தலைவர் நம்மை மகட்பேசத் தமரை
 அனுப்பினால, அவர்களை எதிர்கொண்டு அழைத்து நமர் வரைவு
 ஏற்றுக்கொள்ளுமாறு செய்யத்தக்க் உபாயம் யாது?]

     இவற்றுள், பருவரல் வினவிய பாங்கிக்கு இறைவி அருமறை செவிலி
 அறிந்தமை கூறலும், அலர் பார்த்து உற்ற அச்சக்கிளவியும், ஆறுபார்த்து
 உற்ற அச்சக்கிளவியும், நெறி விலக்குவித்தலும், குறி விலக்குவித்தலும்,
 வெறி விலக்குவித்தலும், பிற் விலக்குவித்தலும், குரவரை வரைவு எதிர்
 கொள்ளுவித்தலும் ஆகிய எட்டும் அச்சத்திற்கும்,

     தலைமகன் ஊர்க்குச் செலவு ஒருப்படுதலும், பாங்கி இறைவனைப்
 பழித்தலும், பூங்கொடி் இறையோன் தன்னை

      61