நேர்ந்து இயற்பட மொழிதலும் கவின் அழிபு உரைத்தலும் பாங்கி நின் குறை நீயே சென்று உரை என்றலும் ஆகிய ஐந்தும் உவர்த்தலுக்கும்,
தலைமகன் வருந்தொழிற்கு அருமை சாற்றலும், கனவு நலிபு உரைத்தலும், தன்துயர் தலைவற்கு உரைத்தல் வேண்டலும், காமம் மிக்க கழிபடர் கிளவியும், தன்னுள் கையாறு எய்திடு கிளவியும் ஆகிய ஐந்தும் ஆற்றாமைக்கும் உரியவாம்.
வரைவுகடாதலின் வகை
522 பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தல்என்று
ஒருநால் வகைத்தே வரைவு கடாதல்.
இது நிறுத்தமுறையானே வரைவுகடாதல் கூறுவனவற்றுள் இஃது அதன்வகை இத்துணைத்து என்கின்றது.
இ-ள்: பொய்த்தல் முதலாக மெய்த்தல் ஈறாக நான்கு வகையினை உடைத்து வரைவு கடாதல் என்றவாறு. 150
பொய்யாகப் படைத்துக் கூறுதல், தலைவன் வருகையை மறுத்துக் கூறுதல், தலைவன் வரையாது வருதலை இடித்து உரைத்தல், நிகழ்ச்சிகளை உண்மையாகக் கூறி விளக்குதல் என்ற நான்கும் தலைவன் தலைவியை வரையுமாறு அவனைப் பாங்கி வற்புறுத்தலுக்கு உரிய துறைகளாம்.
"ஆற்றது தீமையும் அறிவுறு கலக்கமும்
காப்பின் கடுமை கையற வரினும்
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் |
|
|
|