அகத்திணையியல்-நூற்பா எண்-151                         487


 

     வரைவுஎதிர்வு உணர்த்தலும் வரையும்நாள் உணர்த்தலும்
     தலைமகள் அறிவு தலைமகற்கு உணர்த்தலும்
     இகல்அறக் குறித்த இடம்பெயர்த் திடுதலும்
     பகல்வரு வானை இரவுவரல் என்றலும்
     இரவுவரு வானைப் பகல்வரல் என்றலும்
     இருபொழு தினும்இடை விடாதுவரல் என்றலும்
     கொற்றவன் நாடும் ஊரும் குலனும்
     மற்றவன் புகழும் வாய்மையும் கூறலும்
     ஆற்றிடை ஊறினது அச்சம் கூறலும்
     ஆற்றாத் தன்மைக்கு அருமருந்து உரைத்தலும்
     காவல் மிகலொடு காமம்மிகல் உரைத்தலும்
     கனவின் நலிவொடு கவின்அழிவு உரைத்தலும்
     ஆய முறைபயில் அறுமூன்றும் ஒன்றும்
     மேய வரைவு கடாதலின் விரியே."                  மா. அ. 58]

     வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்:

  சுளைஆர் பொழில்துவ ரைத்தொண்டை மான்கப்பல் சூழ்துறைவா
  இளையாள் வருந்துவது என்னைஎன் றாள்அன்னை யாம்இருந்து
  விளையாடு சிற்றிலை வெண்தலைத் தெண்திரை வேலைஎற்றும்
  வளையாலழித்ததுஎன்றாள் என்செய்வாள் பின்னைவாள் நுதலே.

     கப்பல் 196 

 எனவும்,

     [பலாக்கனிகளோடு கூடிய சோலைகளைஉடைய துவராபதி மன்னனான
 தொண்டைமானுடைய கப்பல் என்ற ஊரைச்சார்ந்த கடல் துறைவனே!
 என்தாய் தலைவியை "நீ வருந்தும் காரணம் என்ன?" என்று வினவினாள்.
 "யாங்கள் தங்கி விளையாடிக்கொண்டு கட்டிய மணல்வீட்டைக் கடல் அலை
 எற்றிய சங்குகள் அழித்ததனால் ஏற்பட்டவருத்தம்" என்று அவ்வாள் நுதலி
 குறிப்பிட்டாள். பின்னர் யாது கூறல் வல்லாள்?]