488                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

     அலர் அறிவுத்தல்:

  சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம் பலவர்த் தொழாதுதொல்சீர்
  கற்றும் அறியல ரின்சிலம் பாஇடை நைவதுகண்டு
  எற்றும் திரையின் அமிர்தை இனித்தமர் இல்செறிப்பார்
  மற்றும் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே.         திரு 134

 எனவும்,

     [சிலம்பா! சடைமுடியோனாகிய சிற்றம்பலவனைத் தொழாது
 பலநூல்களைக் கற்றும் அறிவற்றிருப்பார் வருந்துவதுபோல, தலைவியின்
 இடை வருந்துவதுகண்டு, கடல் அமுதம்போன்ற அவளை இனித் தமர்
 இல்லில் செறித்து வைப்பர். மேலும் ஊரவர் சிலபல வார்த்தைகளைப்
 பழிச்சொற்களாகப் பேசுகின்றனர்]

     தாய் அறிவுறுத்தல்:

  பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பல வன்உலகம்
  தனித்துஉண்டவன் தொழும் தாளோன்கயிலைப்பயில்சிலம்பா
  கனித்தொண்டைவாய்ச்சி கதிர்முலைப்பாரிப்புக் கண்டழிவுற்று
  இனிக்கண்டிலம்பற்றுச் சிற்றிடைக்கு என்றஞ்சும் எம்மனையே.

  திரு. 132

 எனவும்,

     [பிறை சூடி, உலகை உண்டதிருமால் தொழும் திருவடிகளையுடைய
 சிவபெருமானின் கயிலைமலையில் பழகும் தலைவனே! தலைவியின் நகிலது
 பாரிப்பைக்கண்டு மனம்வருந்தி, எம் அன்னை "இவள் சிற்றிடைக்குப்
 பற்றுக்கோடு இல்லையே" என்று அஞ்சினாள்.]

     வெளி அச்சுறுத்தல்:

  மைஉற்ற நீலக்கண்மாமங்கை கோன்தஞ்சை வாணன் வெற்பின்
  நெய்யுற்ற வேல்அன்ப நீதணி யாமையின் நெஞ்சத்துள்ளே