அகத்திணையியல்-நூற்பா எண்-151                         489


 

  ஐயுற்று அயர்வுற்றுஎம் அன்னையும் யாயும்என் ஆரணங்கின்
  மெய்யுற்ற நோய்தணிப் பான்வெறி யாடல் விரும்பினரே.

        தஞ்சை. 231 

 எனவும்,

     [நீலம்அன்ன கண்களை உடைய திருமகள் தலைவனான தஞ்சை
 வாணன் மலையில், நெய் பூசிய வேலைஉடைய அன்பனே! நீ
 போக்காமையின் மனத்துள்ளே ஐயுற்றுவாடி என் அன்னையும் நற்றாயும்
 தலைவியின் உடலில் ஏற்பட்ட நோயைப் போக்குதற்கு வெறியாடுதலை
 விரும்பியுள்ளனர்.]

     பிறர் வரைவு உணர்த்தல்:

  மணிஅக்கு அணியும் பரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்
  பணியக் கருணை தரும்பரன் தில்லைஅன் னாள்திறத்துத்
  துணியக் கருதுவது இன்றே துணிதுறை வாநிறைபொன்
  அணியக் கருதுகின் றார்பலர் மேன்மேல் அயலவரே.      திரு. 195 

 எனவும்,

     [துறைவா! அக்குமணி யணிபவனாய், விடத்தைக் கண்டவுடன்
 விண்ணோர்களால் பணியப்பட்டவன் ஆகிய சிவபெருமானின் தில்லையை
 ஒப்பாள் திறத்துத் துணிந்து செய்யவேண்டியதனை இன்றே துணிவாயாக.
 அயலார் பலரும் இவளை மகட்பேசி முலைவிலை அளிக்க
 முன்வந்துள்ளனர்.]

 

    வரைவு எதிர் உணர்த்தல்:

  வழியும் அதுஅன்னை என்னின் மகிழும்வந்து எந்தையும்நின்
  மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன் னேவயம் அம்பலத்துக்
  குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற் றாலம்முற் றும்அறியக்
  கெழிஉம் மவேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே.

        திரு. 235 

 எனவும் வரும்.

        62