எனவும் வரும்.
[வெற்பா! தன் மனத்தில் பெருமதிப்பிற்கு இலக்காக உள்ள தன் தாய்,
சேரியோர், ஆயத்தவர், அயலார் இவரையன்றி என்னையும்கூட,
நம்தலைவி, "உன்னைப்பழி தூற்றுவோமோ?" என்பதற்கு நாணித் தன்
நிலையையும் மெலிந்த தோள் நிலையையும், தோளில் சங்குவளை
நில்லாது கழலும் நிலையையும், யாங்கள் அறியாதபடி மறைத்துவிட்டாள்.]
குறிபெயர்த்திடுதல்:
வாம்மான் உகளும் மணிவரைச் சாரலில் யாம்வளர்த்த
பூமா தவிமீது பூஞ்சிலம் பாபுல்ல நீநினையின்
தேன்மாலை மென்குழை லார்செறி யாஅருஞ் சேண்நெறிக்கண்
நீமாறி வேறுஒரு நீழல்உண் டாக நினைந்தருளே.
அம்பி. 267
எனவரும்.
இஃது இருவகைக்குறிக்கும் ஏற்குமாறு உணர்க.
[அழகிய மலைநாடனே! மான்கள் தாவித்திரியும் மலைச் சாரலில், யாம்
வளர்த்த தலைவியை நீ புல்லுதலை விரும்பினால், மகளிர் போக்குவரத்து
இல்லாத அரிய தூரமான வழியிலே, இப்பொழுது நீ குறித்துக்கொண்டுள்ள
குறியை விடுத்து வேறு ஒரு குறியிடத்தைக் கருதிச் சொல்வாயாக]
பகல் வருவானை இரவு வருக என்றல்:
களிறுஉற்ற செல்லல் களைவயின் பெண்மரம் கைஞ்ஞெரித்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோடு