492                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

  ஒளிறுற்ற மேனியன் சிற்றம் பலம்நெஞ்சு உறாதவர்போல்
  வெளிறுஉற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் எம்அருளே.

திரு, 254 

 எனவும்,

     [இப்பாடல் முதல் இரண்டடிகளின் கருத்து அகநானூற்று எட்டாம்
 பாடற்கண் உள்ளது.

     பள்ளத்தில் விழுந்த யானையின் துயரைத்தீர்த்து அதனை மேல்
 கொண்டுவரப் பெண்யானைகள் மரங்களை முறித்துப் படியாக அமைத்துப்
 பிளிறும் பெருவரை நாடனே! பார்வதி பாகனான சிவபெருமானின்
 சிற்றம்பலத்தை மனத்தில் கொள்ளாதவர்களைப்போல, பகலில் நீ செய்யும்
 அருளிச்செய்கை, வீணாகப் பயனற்ற பழியைத் தருவதாகும்.]

    

 இரவு வருவானைப் பகல் வருக என்றல்:

  கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல சீயம்கங்குல்
  இடந்தொறும் பார்க்கும் இயவுஒரு நீஎழில் வேலின்வந்தால்
  படந்தொறும் தீஅர வன்அம் பலம்பணி யாரின்எம்மைத்
  தொடர்ந்தொறும் துன்புஎன் பதேமன்ன நின்அருள் தோன்றுவதே

திரு. 253 

 எனவும்,

     [மன்ன! காடுகள்தோறும் யானைகளாகிய உணவைத் தேடிச் சிங்கங்கள்
 இரவில் பலஇடங்களையும் பார்க்கும் வழியில், கையில் வேல் ஏந்தி நீ
 தன்னந்தனியாக வந்தால், பாம்பை அணியும் சிவபெருமானின்
 அம்பலத்தைப் பணியாதவர்களைப்போல, எம்மைத் துன்பம் தொடர்ந்து
 வருத்தும். நீ இரவில்வந்து அருள்செய்யும் செயல் இது.]

     பகலினும் இரவினும் பயின்று வருக என்றல்:

  கங்குல் கலைநிறை திங்களும் காலைக் கமலமும்நின்
  துங்கப்புயத்தைவெறுப்பவந்தால்என்சொரிமதத்து