எனவும்,
[மதம் சொரியும் யானையின் தந்தங்களைப் பறித்து அதன்வேரை
உண்ணும் சிங்கங்கள் சேரும் பெரிய அருவிகளை உடைய சிலம்பனே!
இன்றுமுதல் திங்களும் கமலமும் போலும் முகத்தாள் உன்புயத்தைத்
தழுவுமாறு திங்கள் சிறக்கும் இரவும், கமலம் சிறக்கும் பகலும் வருவாயாக.]
பகலினும் இரவினும் அகல்இவண் என்றல்:
சுழியாவருபெருநீர் சென்னிவைத்துஎன்னைத் தன்தொழும்பில்
கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரம்தருமான்
விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்து ஐயமெய்யே
பழியாம் பகல்வரின் நீஇரவு ஏதும் பயன்இல்லையே.
திரு. 261
எனவும்,
[ஐய! சுழித்து வரும் கங்கையைத் தன் தலையில் வைத்து என்னைத்தன்
அடிமைக்கண் பொருந்துமாறு அருள் செய்த சிற்றம்பலத்தான் கையில்
உள்ள மான்போல விழிக்கும் தலைவி திறத்து நீ பகல் வரின் பழி
ஏற்படும்; இரவில் வரின் அவளைக்காணும் வாய்ப்பு உனக்குக் கிட்டாது;
ஆதலின் ஏதும் பயன் இன்று.]
உரவோன் நாடும் ஊரும் குலனும் மரபும் புகழும்
வாய்மையும் கூறல்:
குறைவிற்கும்கல்விக்கும் செல்விற்குநின்குலத்திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்
இறைவில் குலாம்வரை ஏந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்
உறைவில் குலாம்நுத லாள்விலை யோமெய்ம்மை ஓதுநர்க்கே.
திரு. 266