எனவும்,
       [பற்றற்றவர் பற்றும் சிற்றம்பலத்தானின் பரங்குன்றில் நின்ற 
   சிவபெருமான் புதல்வனாகிய  முருகனைப்போல நீ வந்து நின்றால், சிறந்த 
   மலர்தூவி உன்னை வாழ்த்தி வழபடுவாராயின்  நன்று. நினக்கு ஏதேனும் 
   ஊறுசெய்ய மலைவாழ்நர் கருதுவர் ஆயின், தலைவிக்குப் பிறகு  வாழ 
   வழியில்லை.]
   ஆற்றாத் தன்மை ஆற்றக் கூறல்:
    எழுங்குலை வாழையின் இன்கனி தின்றுஇள மந்திஅந்தண்
    செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
    உழும்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல்
    அழுங்குஉலை வேல்அன்ன கண்ணிகாநின் அருள்வகையே. 
      திரு. 250 
   எனவும்,
       [வாழைக்கனியை உண்ட இளமந்தி செழுங்குலையை உடைய 
   வாழைநிழலில் உறங்கும்  வெற்பனே! சிற்றம்பலத்தானை 
   நினையாதவரைப்போல வருந்தும் என்வேற்கண்ணள்  ஆகிய தலைவிக்கு நீ 
   அருளுகின்ற வகைதான் யாதோ?]