அகத்திணையியல்-நூற்பா எண்-151                         495


 

     காவல்மிக உரைத்தல்:

  நறைக்கண்மலிகொன்றை யோன்நின்று நாடகம்ஆடுதில்லைச்
  சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும்செவ் வேல்இளைஞர்
  பறைக்கண்படும்படுந்தோறும் படாமுலைப்பைந்தொடியாள்
  கறைக்கண் மலிகதிர் வேல்கண் படாது கலங்கினவே.

              திரு. 258 

 எனவும்,

     [கொன்றையான் ஆகிய சிவபெருமானின் தில்லைநகர் காக்கும்
 செவ்வேல் இளையவர்களின் கைப்பறை அடிக்கப்படுந்தோறும்,
 குருதிக்கறை படிந்த வேல்போன்ற தலைவியினுடைய கண்கள் உறங்காது
 கலங்கின.]

காமம் மிகஉரைத்தல்:

  வேரல் வேலி வேர்க்கோள் பலவின்
  சாரல் நாட செவ்வியை ஆகுமதி
  யார்அஃது அறிந்திசி னோரே சாரல்
  சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள்
  உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

                           குறுந். 18 

 எனவும்,

     [மூங்கிலை வேலியாகஉடைய பலாத்தோட்டம் நிறைந்த மலைச் சரிவை
 உடைய வெற்ப! நீ என்றும் தலைவிக்குச் செவ்வி எளியையாய்
 இருப்பாயாக. சாரலிலே பலாவின் சிறிய கிளையிலே பெரிய பலாப்பழம்
 தொங்குவதுபோல, இவள் சிறிய உயிரைப் பெரிய காமம் பற்றிக்
 கொண்டிருக்கிறது. இவளுக்கு யாது நிகழுமோ? யார் அறியவல்லார்?

கனவு நலிபு உரைத்தல்:

  அரவும் களிறும் அணங்கும் உலாவும் அருநெறிநீ
  வரவும் குறியிடை வந்துஎதிர் புல்லவும் வல்லிநலம்
  பரவும் பணிமொழி உள்ளம் படுக்கவும் பாயல்இடை
  விரவும் கனவை நனவுஎன்று பாவம் விழித்தனளே.

               அம்பி.276 

 எனவும்,