எனவும் வரும்.
[மந்த மாருதமும் தமிழும் தோன்றும் மலைய மலைத் தலைவனே! மனம்
சுழலும் திருமகள் போன்ற தலைவி உன் மார்பைத் தன்முலைகள்
புல்லுதலைப் பெறாமையால், பசலைபாய அருமையான அவள் பொன்னிறம்
இன்று பயன் அற்று அழிகின்றது.]
இவற்றுள், வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகப்
பிறர்வரைவு உணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் பொய்த்தற்கும்,
குறி பெயர்த்திடுதல் முதலாகப் பகலிலும் இரவிலும் அகல்இவண் என்றல்
ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் மறுத்தற்கும், உரவோன் நாடும் ஊரும்
குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறலாகிய ஒன்றும் கழறற்கும்,
வரைவு எதிர் உணர்த்தலும் வரையும் நாள் உணர்த்தலும்
அறிவுறுத்தலும் ஆறுபார்த்து உற்ற அச்சம் கூறல் முதலாகிய ஆறும்
ஆகிய ஒன்பதும் மெய்த்தற்கும் உரியவாம்
. 151