அகத்திணையியல்-நூற்பா எண்-152                         497


 
ஒருவழித்தணத்தலின் வகை

 524 செலவுஅறி வுறுத்தல்1 செலவுஉடன் படாமை2
     செலவுஉடன் படுத்தல்3 செலவுஉடன் படுதல்4
     சென்றுழிக் கலங்கல்5 தேற்றி ஆற்றுவித்தல்6
     வந்துழி நொந்துஉரை7 என்றுஎழு வகைத்தே
     ஒன்றக் கூறிய ஒருவழித் தணத்தல்.

     இது, நிறுத்தமுறையான ஒருவழித்தணத்தல் கூறுவனவற்றுள் இஃது
 அதன்வகை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் செலவு அறிவுறுத்தல் முதலாக வந்துழி நொந்து உரை ஈறாக
 எழுவகையினை உடைத்து, மேல்சொல்லிப்போந்த ஒருவழித் தணத்தல்
 என்றவாறு.

     ஒருவழித்தணத்தல் நெட்டாறு சேறல் அன்றி, அணிமைக்கண் பிரிவு
 என்று கோடும்; என்னை?

     "தாளான் எதிரும் பிரிவி னானும்" தொல். பொ. 105 உரை.


 என்ப ஆகலின்.                                              152

விளக்கம்

     இஃது இட்டுப்பிரிதல் எனவும் படும்.

 1 தலைவன் தான் இட்டுப்பிரியச் சேர்தலை அறிவுறுத்தல்.

 2 தோழி தலைவன்செலவிற்கு உடன்படாது மறுத்தல்.

 3 தலைவன் காரணம் காட்டித் தான் செல்லவேண்டியதை வற்புறுத்தல்.

 4 அதுகேட்டுத் தோழி தலைவனது செலவுக்கு உடன்படுதல்

 5 தலைவன் சென்றவழித் தலைவி கலங்குதல்.

       63