525	தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றலும்1
     மென்சொல் பாங்கி விலக்கலும்2 தலைவன்
     நீங்கல் வேண்டலும்3 பாங்கி விடுத்தலும்4
     தலைவிக்கு அவன்செலவு உணர்த்தலும்5 தலைவி
     நெஞ்சொடு புலத்தலும்6 சென்றோன் நீடலின்
     காமம் மிக்க கழிபடர் கிளவியும்7
     கோல்தொடிப் பாங்கி ஆற்றுவித் தலும்8 அவன்
     வந்தமை உணர்த்தலும்9 வந்தோன் தன்னொடு
     நொந்து வினாதலும்10 வெந்திறல் வேலோன்
     பாங்கியொடு நொந்து வினாதலும்11 பாங்கி
     இறைவியை ஆற்றுவித்து இருந்த அருமை
     கூறலும்12 என்னும் ஆறுஇரு கிளவியும்
     ஒருவழித் தணத்தல் விரிஎனப் படுமே.
     இஃது ஒருவழித் தணத்தலின் விரி இத்துணைத்து என்கின்றது.
     இ-ள் தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல் முதலாகப் பாங்கி
 இறைவியை ஆற்றுவித்து இருந்த அருமை