"தலைவன் தன்பதிக்கு அகற்சி சாற்றலும்
சிலைநுதல் பாங்கி செலவு விலக்கலும்
நீங்கல் வேண்டலும் பாங்கி விடுத்தலும்
கோமகன் செலவினை இகுளை கூறலும்
பூமகள் நெஞ்சொடு புலந்து கூறலும்
சேம வேலவன் நீடலின் சேயிழை
காமம் மிக்க கழிபடர் கிளவியும்
அன்னமென் னடைதுயர் பாங்கி ஆற்றலும்
மன்னவன் வந்தமை மடந்தைக்கு உணர்த்தலும்
நுண்ணிடைப் பாங்கி நொந்து வினாதலும்
அண்ணலும் நொந்துஅவள் தன்னொடு வினாதலும்
அணங்கினைப் பாங்கி ஆற்றுவித்து இருந்தமை
இணங்கக் கூறலும் என்னும்முந் நான்கும்
ஒருவழித் தணத்தற்கு உரிய விரியே."
மா. அ. 60
தன்பதிக்கு அகற்சி தலைவன் சாற்றல்:
ஒடிக்கும் கரும்பின்உடுக்குலம்தோன்றும் எம்ஊர் வயின்போய்
முடிக்கும் குறைஉண்டு நீஇசைந் தால்முழு முத்துஅணியும்