[வானை அளாவிய பொழில்களை உடைய வெற்பா! பார்வதி
சிவபெருமானைப் பொருந்தியதுபோல இவள் உன்னைஅன்றி உயிர் வாழ்தல்
இயலாத நிலையை அறிந்தனை ஆயின், உன் ஊருக்குச்சென்று
உன்செயலையும் முடித்து எம்மையும் காத்தலைக் கருதுவையாயின், இன்றோ
நாளையோ உன்செயலை முடித்து விரைவில் மீண்டு வருவாயாக.]
இரவுநிலை உணர்த்தல்:
இருகாலும் இல்லை வலவனுக் கேனும் எழுபரித்தேர்க்கு
ஒருகால் ஒழிய ஒருகா லமும்இல்லை ஒண்சிலம்பா
குருகுஆலும் வாரிதி ஏழும்எண் குன்றமும் சூழ்ந்துஇரவி
வருகாலம் என்று கொல்அன்று நீயும் வருவதுவே.
அம்பி. 283
என இரவுநிலை உணர்த்தலும் இதன்பாற்படும்.
[சிலம்பா! சூரியனுடைய தேர்ப்பாகனுக்கு இரண்டு கால்களும் இல்லை.
அவன் ஏழு குதிரைகள் பூட்டிய தேருக்கு ஒரு சக்கரமே உண்டு. மேலும்
அது இராக்காலத்தில் ஓடாது