நாரைகள் பறக்கும் கடல்கள் ஏழனையும் குன்றங்கள் எட்டனையும் சுற்றிப் பின் கதிரவன் மீண்டும் உதித்துக் காட்சி வழங்கும் காலை நேரத்தில் நீயும் வந்துவிடு.]
பாங்கி தலைவிக்கு அவன்செலவு உணர்த்தல்:
கருநாள் மலர்க்குழல் காரிகை யாய்ஒரு காரணத்தால்
ஒருநாள் நமைவிட்டுஉறையவும் வேண்டினர் ஒன்றியநின்
பெருநாண் மடமை பிணிக்கப் பிணிப்புண்ட பேரறிவின்
மருநாள்மலர்த் தொங்கல்மன்னர் என்னோநம் வசம்ஒழிந்தே.
அம்பி. 284
எனவும்,
[மலர்க்குழல் காரிகையே! அவரோடு கூடிய உன் நாணமும் மடமும் தம் உள்ளத்தைப் பிணித்ததால் நின்னைப் பிரியாது உறைந்த, பேரறிவினை உடைய, மலர்மாலை அணிந்த நம் தலைவர், நம்மை விடுத்து ஒரு காரணத்தால் ஒருநாள் நம் ஊருக்குச் சென்று தங்குதலை வேண்டுகிறார்.]
தலைவி நெஞ்சொடு புலத்தல்:
அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
குறள் 1154
எனவும் வரும்.
ஒருநாள் பிரிய நினைத்தவர் நம்மை ஒழிந்தஎல்லை
வருநாள் மறக்கவும் வல்லர்அன் றேமறப் பார்நினைவார்
செருநாள் மலர்க்கணைத் திண்சிலை வேள்வந்து சிந்தும்எல்லை
அருநா ணுடன்எங்ஙன் ஆவியும் நாமும்இன்று ஆற்றுவதே.
அம்பி 285
இதுவும் அது.
[நமக்கு அருள் செய்து "அஞ்சாதீர்" என்று நம்மைத் தெளிவித்த தலைவனே பிரியின், அவன் சொல்லை நம்பியிருக்கும் நம்மேல் தவறு ஒன்றும் இல்லை.
|
|
|
|