கையறு கிளவி:
நன்றே இனியவர் நண்பு நமக்கும் அவர்க்கும்உயிர்
ஒன்றே நினையில் உறையும்ஒன் றேஉயர்வெண்மணல்திண்
குன்றே குலஅன்ன மேகுரு கேநம் கொடிநெடுந்தேர்
அன்றே வருவல்என் றார்இருந் தேன்மெய் வருந்தியுமே.
அம்பி. 294
எனவும்,
[மணற்குன்றே! அன்னங்களே! நாரைகாள்! தம்தேரில் ஊர் சென்று அன்றே மீண்டு வருவதாகத் தலைவர் கூறினார். அச்சொல்லை நம்பி மெய் வருந்தியும் ஆற்றி இருந்தேன். "எனக்கும் அவருக்கும் உயிரும் ஒன்று; கூர்ந்து நோக்கின் உடலும் ஒன்று" என்று இருந்தேன். இனியவர் நட்பு நன்று!]
கூடல் இழைத்தல்:
முளைக்கும் பிறையை முனியும் திருநுதல் முத்துஅரும்ப
விளைக்கும் பசலை விழியிணை காட்ட விடாதஅண்டர்
கிளைக்கும் தெரிவுஅரு கேதகை நீழல் கிளிஇருந்து
வளைக்கும் சுழிக்கும் அழிக்கும் ஒண்கூடல்வளைக்கைகொண்டே.
அம்பி. 295
எனவும்,
[பிறை நுதல் வேர்வு அரும்ப, விழிகள் பசலைபாய, தேவர்களும் காண்டல் இயலாத தாழையின் நிழலிலே கிளி போன்ற தலைவி இருந்து கூடல் சுழியை வளைப்பாள்; சுழிப்பாள்; பின் வளைக்கைகளால் அழிப்பாள். அவள் பெற்றி இது!]
சூளுறவு பொய் என்றல்:
புறம்தாழ் விரிசினைப் புன்னையங் கானல்மென் பூந்துறைவர்
சிறம்தாழ் கருங்கடல்தெய்வமும் தீதுகொல்சிந்தைமென்நாண்
|
|
|
|