அகத்திணையியல்-நூற்பா எண்-153                         509


 

  துறந்து ஆவிசோர்வது என்என்றற்றைநாளுற்றசூள்முழுதும்
  மறந்தார் இருக்க மறவாத எம்மை வருத்தியதே.

அம்பி. 297 

 எனவும்,

     [விரிந்த கிளைகளை உடைய புன்னைமரச் சோலையை அடுத்த
 பூந்துறைவர் ஆகிய  தலைவர் வணங்கும் கடல் தெய்வமும் நடுவுநிலை
 தவறுவதுதானோ? என் மனத்திடை நாணத்தைத் துறந்து நான் உயிர்
 சோர்வது ஏன்? அன்று தாம்செய்த சூளுறவை மறந்த  தலைவரை விடுத்து,
 அத்தெய்வம் என்னை வாட்டுவது ஏனோ?]

     மடமை கூறல்:

  விடர்வாய் அரவை மிதித்து மதித்த விலங்குஅன்றியே
  நடவா இரவில் நயந்தநம் காதலர் நம்மைஇனிக்
  கடவார் எனநினைத் தேன்இங்ஙன் ஆனதுஎன் கண்ணும்மெய்யும்
  மடவார் அறிவதுஉண்டோ உரவோர் செயும்வன் கண்மையே.

அம்பி. 298 

 எனவும்,

     [பிளப்பிடங்களிலுள்ள பாம்புகளையும் மிதித்துக் கொண்டு தீய
 விலங்குகளின் நடமாட்டத்தையும் பொருட்படுத்தாது இரவில் வந்து
 என்னைக் கூடிய தலைவன், என்னை இனிக் கைவிடமாட்டான் என
 நினைத்தேன். என் கண்களும் மெய்யும் இத்தகைய அழகு  அழிநிலையை
 எய்திவிட்டன. அறிவுடையோர் செய்யும் கல்நெஞ்சச் செய்திகளை
 மடவார்கள்  (பெண்கள், அறிவற்றவர்) யாங்கனம் அறிதல் கூடும்.?]

     தலைவி தன்னுள்ளே சொல்லுதல்:

   மாயக் கலவி மணந்துஅகன் றார்திரு மார்புஅகலம்
   தோயப் பெறாது சுடுகின்ற மேனி துறந்தவர்தம்
   தேயத்து நின்று வருநதி நீரில் திளைத்தனமேல்
   சாயக் குளிரும்இன் றேஅவர் சாரல் தழைபடுத்தே.

அம்பி 299 

 எனவும் வரும்.