தலைமகளைப் பாங்கி விலக்கல் ஆகிய ஒன்றும் செலவு உடன்
படாமைக்கும்,
நீங்கல்வேண்டல் ஆகிய ஒன்றும் செலவு உடன்படுத்தற்கும்,
பாங்கி விடுத்தல் ஆகிய ஒன்றும் செலவு உடன்படுதலுக்கும்,
தலைமகள் நெஞ்சொடு புலத்தலும், காமம் மிக்க கழிபடர் கிளவியும்
ஆகிய இரண்டும் சென்றுழிக் கலங்கற்கும்,
தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தலும், தலைமகன் வந்தமை
தலைமகட்கு உணர்த்தலும் ஆகிய இரண்டும் தேற்றி ஆற்றுவித்தற்கும்,
பாங்கி வந்தோன்தன்னொடு நொந்து வினாதல் முதலாகிய மூன்றும்
வந்துழி நொந்து உரைத்தற்கும் உரியவாம் என்றவாறு.153
வரைபொருட்பிரிதலின்வகை
526 பிரிவுஅறி வுறுத்தல்1 பிரிவுஉடன் படாமை2
பிரிவுஉடன் படுத்தல்3 பிரிவுஉடன் படுதல்4
பிரிவுழிக் கலங்கல்5 வன்புறை6 வன்பொறை7
வருவழிக் கலங்கல்8 வந்துழி மகிழ்ச்சி9 என்று
ஒருமையில் கூறிய ஒன்பது வகைத்தே
வரைவுஇடை வைத்துப் பொருள்வயின் பிரிவே.