514                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

ஒத்த நூற்பாக்கள்

     முழுதும்-                                           ந. அ. 169

    "துறவுஅறி வுறுத்தல் துறவுஉடன் படாமை
     துறவுஉடன் படுத்தல் துறவுஉடன் படுதல்
     போயுழிக் கலங்கல்வன் பொறைவற் புறுத்தல்
     வரும்வழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சியென்று
     உரைபெறும் ஒன்பது வகைத்தென்று ஓதுப
     வரைவுஇடை வைத்துப் பொருள்வயின் பிரிவே."     மா. அக. 154

வரைபொருட்பிரிதலின் விரி  

 527 என்பொருட் பிரிவுஉணர்த்து ஏந்திழைக்கு என்றலும்1
     நின்பொருட் பிரிவுஉரை நீஅவட்கு என்றலும்2
     நீடேன் என்றுஅவன் நீங்கலும்3 பாங்கி
     ஓடுஅரிக் கண்ணிக்கு அவன்செலவு உணர்த்தலும்4
     பூங்குழை இரங்கலும்5 பாங்கி கொடுஞ்சொல்
     சொல்லலும்6 தலைவி கொடுஞ்சொல் சொல்லலும்7
     வருகுவர் மீண்டுஎனப் பாங்கி வலித்தலும்8
     பருவம் கண்டு பெருமகள் புலம்பலும்9
     இகுளைவம்பு என்றலும்10 இறைமகள் மறுத்தலும்11
     அவர்தூது ஆகிவந்து அடைந்ததுஇப் பொழுதுஎனத்
     துணைவி சாற்றலும்12 பிணைவிழி ஆற்றலும்13
     அவன்அவண் புலம்பலும்14 அவன்வருங் காலைப்
     பாகன் தன்னொடும்15 மேகம் தன்னொடும்16
     சோகம் கொண்டுஅவன் சொல்லலும் பாங்கி
     வலம்புரி கேட்டுஅவன் வரவுஅறி வுறுத்தலும்17
     வலம்புரி கிழத்தி வாழ்த்தலும்18 வந்துழி
     நினைத்தமை வினாதலும்19 நினைத்தமை செப்பலும்20
     அனத்தகை அவளை ஆற்றுவித்து இருந்தமை
     பாங்கி கூறலும்21 என ஆங்குஎழு மூன்றும்
     வரைவுஇடை வைத்துப் பொருள்வயின் பிரிவின்
     விரிஎன விளம்பினர் தெரிபுஉணர்ந் தோரே.