516                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 11 தோழி கூறிய கூற்றைத் தலைவி மறுத்தல்.

 12 "மேகம் மீண்டு வரும் தலைவனுடைய தூதாகி இக்காலத்தில் வந்தது"
    என்று பாங்கி  கூறுதல்.

 13 தலைமகள் அச்சொல் கேட்டு ஆறுதல் அடைதல்.

 14 தான் பிரிந்துசென்ற அவ்விடத்தில் தலைவியின் பிரிவு ஆற்றாது
    தலைவன் புலம்புதல்.

 15 வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறல்.

 16 வினைமுற்றி மீளும் தலைவன் மேகத்திடம் கூறல்.

 17 தன்வரவைத் தலைவிக்கு அறிவுறுத்தலுக்குத் தலைவன் ஊதிய சங்கின்
    முழக்கத்தைப்  பாங்கி கேட்டு, அவன் வருகையைத் தலைவிக்கு
    அறிவித்தல்.

 18 தலைவன் ஊதிய வலம்புரிச் சங்கினைத் தலைவி வாழ்த்துதல்.

 19 தலைவன் வந்தஇடத்து,"நீர் பிரிந்த காலத்துத் தலைவியை
    நினைத்தது  உண்டோ?" என்று தோழி வினவுதல்.

 20 தலைவன் தலைவியை நினைந்தவாற்றைக் கூறுதல்.

 21 பாங்கி தலைவியைத் தலைவன் பிரிந்தகாலத்தில் ஆற்றுவித்துக்
   கொண்டிருந்த  அருமையை விளக்கிக் கூறுதல்.

ஒத்தநூற்பாக்கள்

    "முலைவிலை கூறல் வரைவுஉடன் படுத்தல்
     வரைபொருட்கு ஏகலை உரைஅவட்கு என்றல்
     நீகூறு என்றல் சொல்லாது ஏகல்
     பிரிந்தமை கூறல் நெஞ்சொடு கூறல்
     நெஞ்சொடு வருந்தல் வருத்தம்கண்டு உரைத்தல்