குன்றம் கிடையும் கடந்துஉமர் கூறும் நிதிகொணர்ந்து
மின்தங்கு இடை நும்மை யும்வந்து மேவுவன் அம்பலம்சேர்
மன்தங்குஇடை மருது ஏகம்பம்வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றுஅங்கு இடைகொண்டு வாடாவகைசெப்புதே மொழியே
திரு. 268
எனவும்,
[தேமொழித் தோழியே! குன்றங்களைக் கடந்து சென்று உம்தமர் கூறும்
செல்வத்தைக் கொண்டு மின்னலை ஒத்த இடையையுடைய உம்மைவந்து
சேருவேன். சிவபெருமான் வீற்றிருக்கும் திருவிடைமருதூர், திருஏகம்பம்,
திருவாஞ்சியம் என்ற தலங்களை ஒத்த தலைவியை வருத்தம் கொண்டு
வாடாதபடி என்பிரிவு கூறி ஆறுதல்மொழி கூறுவாயாக.]