[காதளவும் நீண்ட கண்களையும் நுண்ணிய இடையையும் உடையாய்!
உங்கள் ஊரவர் மங்கலம் பாடவும், பரிசிலர் ஆடவும், முழுமதி போன்ற
ஒளியை உடைய முகத்தாளாகிய தலைவியை மணப்பதற்கு விரைவாகப்
பொருள் தேடிக்கொண்டு மீண்டுவிடுவேன். காலம் தாழ்க்கமாட்டேன்.]
பாங்கி தலைமகட்குத் தலைமகன் செலவு உணர்த்தல்:
நல்லாய்நமக்கு உற்றதுஎன் என்றுஉரைக்கேன் நமர்தொடுத்த
எல்லா நிதியும் உடன்விடுப் பான்இமை யோர்இறைஞ்சும்