520                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 மல்லார் கழல்அழல் வண்ணர்வண் தில்லைதொழார்கள் அல்லால்
 செல்லா அழல்கடம் இன்றுசென் றார்நம் சிறந்தவரே.
                                                       திரு. 271

 எனவும்,

     [நல்லாய்! நமக்கு இன்று ஏற்பட்டுள்ள நிகழ்ச்சியை மகிழ்ச்சிக்கு உரியது
 என்பேனா? வருத்தம் தருவது என்பேனா? நமர் வேண்டிய எல்லாச்
 செல்வத்தையும் ஒருசேரத் திரட்டி வர, தேவர்கள் வணங்கும் கழல்களை
 உடைய சிவபெருமானுடைய தில்லையைத் தொழாத தீவினையாளரேயன்றிப்
 பிறர் யாரும் சென்று அறியாத வெய்ய பாலைநிலத்தைக் கடந்து  செல்ல
 நம் தலைவர் இன்று சென்றுவிட்டார்.]

தலைமகள் இரங்கல்:

 அருந்தும் விடம்அணி யாம்மணி கண்டன்மற்று அண்டர்க்குஎல்லாம்
 மருந்துமமிர்தமும் ஆகும்முன்னோன் தில்லைவாழ்த்தும்வள்ளல்
 திருந்தும் கடன்நெறி செல்லும்இவ் வாறு சிதைக்கும்என்றால்
 வருந்தும் மடநெஞ்ச மேஎன்ன தாம்இனி வாழ்வகையே.
                                                       திரு. 272

 எனவும்,

     [மடநெஞ்சே! விடத்தைக் கழுத்துக்கு அணியாகக் கொண்டு்
 தேவர்களுக்கு மருந்தும் அமுதமும் ஆகிய சிவபெருமானுடைய தில்லையை
 வாழ்த்தும் தலைவன் தன் கடமையை முற்றச் சென்று நம்மை இவ்வாறு
 துன்புறுத்துவனாயின், நமக்கு வாழும் வகை ஒன்றும் இன்று.]

பாங்கி கொடுஞ்சொல் சொல்லல்:

 மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான்
 கதும்எனப்போக்கும் நிதியின் அருக்கும்முன்னிக்கலுழ்ந்தால்
 நொதுமலர் நோக்கம்ஓர் மூன்றுஉடை யோன்தில்லை நோக்கலர்போல்
 இதுமலர்ப்பாவைக்கு என்னோவந்தவாறு என்பர் ஏந்திழையே.
                                                       திரு. 275

 எனவும்,