[சோலையிலே நம்மை மருவி வாய்மையும் அன்பும் கலந்த
மொழிகளைப் பேசிப் பின் கொடிய கானவழியிலே திடீரென்று புறப்பட்டுப்
போகும் போக்கையும் செல்வத்தின் தேடுதற்கு அருமையையும் நினைத்து நீ்
வருந்தினால், "முக்கண்ணனுடைய தில்லையைத் தரிசிக்காதவர்போலத்
தலைவிக்கு என்ன துயரம் ஏற்பட்டு விட்டது?" என்று அயலார் உசாவத் தொடங்கிவிடுவர்.]
தலைவி கொடுஞ்சொல் சொல்லல்:
வந்துஆய் பவரைஇல் லாமயில் முட்டை இளையமந்தி
பந்துஆடு இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே
கொந்தார்நறுங்கொன்றைக் கூத்தன்தென்தில்லை தொழார்குழுப்போல்
சிந்தா குலம்உற்றுப் பற்றுஇன்றி நையும் திருவினர்க்கே.
திரு. 276
எனவும்,
[கவனிப்பவரைப் பெறாத மயில் முட்டையைப் பெண் குரங்கு பந்தாடும் சோலைகளையுடைய மலைநாடன் பண்பு, கொன்றை மாலையை அணிந்த
கூத்தனின தில்லையைத் தொழாதவர் கூட்டத்தைப்போல மனம்வருந்திப்
பற்றின்றித் துன்புறும் பேறு
உடையார்க்கு நன்றாக இருக்கிறதே!]
வருகுவர் மீண்டு எனப்பாங்கி வலித்தல்:
கான்அமர் குன்றர் செவிஉற வாங்கு கணைதுணையாம்
மான்அமர் நோக்கியர்நோக்கு எனமான்நல்தொடைமடக்கும்
வான்அமர் வெற்பர் வண்தில்லையின் மன்னைவணங்கலர்போல்
தேன்அமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே.
திரு. 274
எனவும்,
[இன்சொலாய்! வில்லில் அம்பைப் பூட்டிய கானவர் தம் துணைவியர
நோக்கத்தை ஒத்த நோக்கைஉடைய மானைக் கண்டதும் அம்பு எய்தலை
நீக்கிவிடும்வான்அளாவிய