522                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

 மலையை அண்மையில்கொண்ட தில்லை மன்னனாகிய சிவபெருமானை
 வணங்காதவர போல், தம்தலைவன் உன்னைப்பிரிந்து செல்லமாட்டான்
 ஆதலின், நீ வருந்துதல் வேண்டா.]

     பருவம் கண்டு பெருமகள் புலம்பல்:

 தார்கால மன்றல்அம் கொன்றையங் கானம் தடஞ்சிறைவண்
 கூர்கால நாரை யுடன்குருகு ஆலக்கொழுங்கயல்கண்
 நீர்கால ஆடகம் மென்னிறம் காலப்பிறங்குமழைக்
 கார்காலம் வந்தது வாரார்கொல் இன்னமும் காதலரே.
                                                      அம்பி 313

 எனவும்,

     [கொன்றை மாலையைப் போலப் பூப்பக் கானத்தில் நாரையுடன்
 ஏனைய பறவைகளும்  ஒலிப்ப, கண்கள் கண்ணீரைப் பெருக்க நிறம்
 பசலைபாயக் கார்காலம் வந்தும், நம் தலைவர் மீண்டுவந்தார் அல்லரே!]

     இருளை வம்பு என்றல்:

 கருந்தினை ஓம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச்
 சொரிந்தன கொண்மூச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பில்
 பரிந்துஎனை ஆண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றில்துன்றி
 விரிந்தன காந்தள் வெருவரல் கார்என வெள்வளையே.

 எனவும்,                                                திரு. 279

                                                       

     [வெள்வளையே! தன் அருளால் என்னை ஆட்கொண்ட
 சிற்றம்பலத்தானின் பரங்குன்றில்  தினை நன்கு செழித்து வளர்தல்
 வேண்டும் என்பதற்காக நமர் இறைவனை வேண்ட, மேகங்கள்  காலம்
 அல்லாக் காலத்தில் மழை பொழியவே, அதனைக் கார்காலமாகக்  கருதிக்
 காந்தள்செடிகள்  பூத்ததனைக் கொண்டு, "தலைவர்  மீண்டு வாராமுன் கார்
 காலம் வந்து விட்டதே" என்று  அஞ்சாதே.]

     இறைமகள் மறுத்தல்:

 சொல்லிய சொல்வழு வாத்தொண்டை வேந்தன் துவரைவெற்பில்
 புல்லிஅருஞ்சுரம்போனவர்வார்த்தையில்பொய்ம்மைஒன்றும்