அகத்திணையியல்-நூற்பா எண்-155                         523


 

 இல்லை எனும்கொடி யேஅது போக இவையும்பொய்யோ
 மல்லிகை முல்லை செருந்திவிற் பார்சொல்லும் வார்த்தைகளே
                                                      கப்பல்.243
  

 எனவும்,

     [சொன்னசொல் தவறாத தொண்டைமானுடைய துவராபதியை அடுத்த
 மலையிலே நம்மைத் தழுவி வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிந்த
 தலைவர்  வார்த்தையில் பொய்  ஒன்றும் இல்லை என்று சொல்லும்
 தோழியே! கார்  காலத்தில் பூக்கக்கூடிய மல்லிகை முல்லை  செருந்திப்
 பூக்களை விற்பார்  கூறும் பண்டமாற்று ஒலியும் பொய்யோ?]

     அவர் தூதாகி வந்தடைந்தது இப்பொழுது எனத்துணைவி சாற்றல்:

 பருவம் அடுத்தது வந்திலர் காதலர் என்றுபைம்பொன்
 உருவ மடப்பிடி யேஉயங் கேல்உயங் காதவண்ணம்
 பொருபகைசெற்றபொற்றேர்வெற்றிவேந்தர் பொருள்முடித்து
 வருவது உரைப்பமுன் னேவந்த தால்இந்த மைம்முகிலே.
                                                       அம்பி.317

 எனவும்,

     [பொன்னிற மடப்பிடியே! "கார்காலம் வந்து விட்டது தலைவர் மீண்டு
 வரவில்லை" என்று  கூறி வருந்தாதே. "நீ வருந்துதல் கூடாது
 என்பதற்காகவே, பகைவரை அழித்த வெற்றியை உடைய நம்தலைவர்
 வந்துகொண்டிருக்கிறார்" என்பதனை நமக்குக் கூறுவதற்காகக்  கார் மேகம்
 தூதாகி வந்துள்ளது.]

     தலைமகள் ஆற்றல்:

 கருங்காலவெண் குருகும்கண்டல் வாய்விட அஞ்சும்கொண்டல்
 பொருங்கால் அழிந்து புலம்பும்நெஞ் சேதண் புறவமயில்
 ஒருங்குஆல மேகம் இகுத்துஉறை கால அறைகழலார்
 வரும்காலம் வந்தது போங்காலம் இல்லைநம் மன்உயிர்க்கே.

 எனவும்,                                              அம்பி. 318