[வெண்குருகுகள் கண்டல்களிடையே ஒலிப்பக் கண்டார் அஞ்சுமாறு
மேகம் பொழிதல் கண்டு வருந்தும் நெஞ்சே! காடுகளில் மயில்கள் ஆட
மேகங்கள் இடித்து மழை பொழியப் பிரிந்த தலைவர் மீண்டுவருவதாகச்
சொன்ன காலம் வந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லை; நம் உயிருக்குப்
போகும் காலமும் வரவில்லை!]
அவன் அவண் புலம்பல்:
விழிகுழி யும்படி தேர்வழி பார்த்தனை வீழ்ந்துவண்டு
கொழுதிஇமி ரும்குழல் சோரக் கிடந்தும் குடங்கையின்மேல்
ஒழுகிய அஞ்சன வெள்ளத்து உணங்கும் அணங்கைமுன்சென்று
எழுகஎனும் நெஞ்சம் என்னே அவரோ எனின் என் சொல்லுமே.
அம்பி. 319
எனவும்,
[விழிகள் தாம் பலகாலும் பார்ப்பதனால் குழிந்து போகும்படி தேர்வரும்
வழியை நோக்கியவண்ணம் வண்டுகள் ஒலிக்கும் கூந்தல் சோர
உள்ளங்கையில் கண்ணீர் வெள்ளம்போல் பாய வருந்தும் தலைவியை,
"முன் சென்று தலைவனை வரவேற்க வருவாயாக" என்று கூறுதற்குப் போன
என் மனம், "அவர் எங்கே" என்று அவள் கேட்டால் என்ன விடை
கூறுமோ?
மீண்டுவரு தலைவன் பாகனொடு சொல்லல்:
மொய்ஆ டகமுடித் தேர்வல வாமுன் மொழிந்ததுஎல்லாம்
பொய்யானது என்று புலந்துஉரை யாடப் பொருள்விரும்பி
மைஆர் குழலியை வாழ்வித்த பாவி மனத்தைஇன்றுஉன்
கையாக வும்பரிக் காலாக வும்அயன் கண்டிலனே.
அம்பி. 320
எனவும்,
[பொற்சிகரம் வேய்ந்த தேரை ஓட்டும் பாகனே! "தலைவன் கார்காலத்
தொடக்கத்தில் "பொருள்முற்றி மீண்டு வருகிறேன்" என்று கூறிய கூற்றுப்
பொய்யாயிற்றே" என்று