அகத்திணையியல்-நூற்பா எண்-155                         527


 

     [கொவ்வைச் செவ்வாய்க் கொடியே! பொருள் தேடுதலாகிய  தேவையை
 மேற்கொண்டு தலைவியைப் பிரிந்து சென்ற இடங்களில்  எல்லாம், உங்கள்
 இளமரக்காவும் செய்குன்றும் பாவையும் நீயும் நறுமணம்  கமழும்
 சோலையும் விளையாட்டிடமுமே என் கண்முன் உருவெளியாகக்  காட்சி
 வழங்கின]

     தலைமகளை ஆற்றுவித்து இருந்த அருமை பாங்கி கூறல்:

     மதிகாட் டியநுதல் வல்லிசிந் தாகுலம் மாற்றியதுஉன்
     பதிகாட் டியும்ஒண் பனிவரை காட்டியும் பாய்திரைநீர்
     நதிகாட் டியும்புது நன்விருந்தாகி நடந்ததிண்தேர்க்
     கதிகாட் டியும்முன் கலந்தசந் தாடவி காட்டியுமே.     அம்பி. 328

 எனவும் வரும்.

     [பிறைநுதல் தலைவியை, உன் ஊரைக்காட்டியும், உன் குளிர்ந்த
 மலையைக் காட்டியும்,  உன் மலையிலிருந்துவரும் நதியைக் காட்டியும், உன்
 தேர் சென்ற புதுச்சுவட்டைக் காட்டியும், உன்னைக் கூடிய  சந்தனமரக்
 காட்டினைக் காட்டியுமே துயரத்தை ஆற்றுவித்துக்  கொண்டிருந்தேன்.]

     உரையிற் கோடலான், தலைவன் ஆற்றுவித்திருந்த அருமை வினாதலும்
 வரப்பெறும். அதற்குச் செய்யுள்:

 சிமையா டகவரைச் சேண்நெறிச் சென்றுஅருஞ்செய்பொருளுக்கு
 உமையான் ஒழிந்துஅங் குறைந்த அந்நாளிங் குடனிருந்து
 இமையா விழிக்கின்ற இத்துணைப் போதினும் என்னைஅன்றி
 அமையா அணங்கின் அணங்கைஎவ் வாறுஇருந்து ஆற்றினையே.
                                                      அம்பி.327

 எனவரும்.

     [உச்சியைஉடைய மேருமலைபோலும் மலைப்பக்கத்தே நீண்ட தொலைவு
 சென்று பொருள் தேடுவதற்காக உம்மைப் பிரிந்து அங்குத் தங்கிஇருந்த
 நாள்களில் எல்லாம், இங்குப் பெரும்பாலும் என்னுடனேயே இருந்து,
 இமைத்துப் பின்