240                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

விளக்கம்

     "பாங்கனோரின்" (இறை கள. 3) என்றதொடரால், முதல்முதல்
 இருவகைப்பாங்கர் இறையனார்களவியல் உரையிலேயே சுட்டப் படுகின்றனர்.

ஒத்த நூற்பாக்கள்

        முழுதும்-                                        ந. அ.101

 

                                                             97

பாகன் தொழில்கள்

 470 சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும்
     வாயில்நேர் வித்தலும் வயங்குதுனி தீர்த்தலும்
     வினைமுடித் ததன்பின் வியன்பதி சேய்த்துஎன
     இனைவோற் றேற்றலும் பாகற்கு இயல்பே.

     இது பாகற்கு உரியனஎல்லாம் தொகுத்து உணர்த்துகின்றது.

     இ-ள் தலைமகளை வாயில்வேண்டல் முதலாகச் சொல்லப்பட்டன
 எல்லாம் பாகற்கு இயல்பாம் என்றவாறு.                            98

விளக்கம்

    "கிழவி நிலையே வினைஇடத்து உரையார்
     வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்."       தொல். பொ. 186

    "வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
     இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை."                  " 194
     

     இவ்விதிகளால் தலைவன் வினைமுற்றிய பிறகே தலைவியின் நினைவு
 மேலிட்டுச் சுரத்திடைக் காலம் தாழ்த்தாது மீண்டு வருதலை விரும்புவான்
 என்பதும், மீட்சிக்குப் பாகன் மிகவும் உதவுவான் என்பதும் கொள்க.