இது நிறுத்த முறையானே கற்பின் பாகுபாடு கூறுகின்றது.
இ-ள் : மேல் கூறிப் போந்த கற்பு களவிற்புணர்ச்சி வழியான் வந்த
கற்பும், களவிற்புணர்ச்சிவழியான் வாராக் கற்பும் என இரண்டு பகுதியினை
உடைத்தாம் என்றவாறு.
களவின் வழிவந்த கற்பினை முற்கூறினார், அதனது சிறப்பு நோக்கி. 51