முழங்கும் குரவை இரவில்கண்டு ஏகுக முத்தன்முத்தி
வழங்கும் பிரான்எரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே"
[இயல்பாகவே விடுபட்டவனாய் நமக்கு முத்தி வழங்கும் பெருமானாய்
எரியாடும் சிவபெருமானுடைய தில்லை நகரை ஒட்டி, அருவி முழங்கும் எம்சீறூர் இது. இன்று எம்மொடு இருந்து மதுவும் கிழங்கும் உண்டு, குறவர் ஆடும் கூத்தினை இரவில் கண்டு பின் உன் ஊருக்குச் செல்வாயாக]
"சூதுஆர் வனமுலைத் தோகைஅன் னீர்உங்கள் செங்கைதொட்டது
யாதா யினும்எனக்கு இன்னமு தாம்எல்லை சாயும் எல்லை
தாதுஆர் மலர்ப்பொழில் தங்கலும் ஆம்இங்ஙன் உங்கள்வெற்புக்
காதுஆர் நறுங்குழைக் கானவர் வானவர் காவல்இன்றே
[மயிலனையீர்! உங்கள் கையால் தொடப்பட்ட பொருள் எதுவாயினும்
எனக்கு அமுதமாகும். கதிரவன் மறையும் நேரத்தில் இப்பொழில் தங்குதற்கும் இனிதாக உள்ளது. உங்கள் மலையும் காதில் குழை சூடிய கானவர் காவலோ, தேவர் காவலோ உடையது அன்று.]
இவற்றுள், இயைதலும் அதன்பாற்படும் இடத்துஎதிர்ப் படுதலும்
புகழ்தலும் விடுத்தலும் விருந்து இறை விரும்பலும் ஆகிய தலைவன்
கூற்றுக்கள் ஐந்தும், இயைதல் நிமித்தமாகி நிகழும் தோழிகூற்று முப்பத்து நான்குமாக ஈண்டைக்கு உரிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகிய கிளவிகள் முப்பத்தொன்பதுமே அன்றித் தோழிகூற்று நிகழ்தற்கு நிமித்தம் ஆகிய ஏனைத் தலைவன்கூற்றுப் பதினெட்டும் தலைவிகூற்று நான்குமாக ஈண்டைக்கு உரியஅல்ல ஆகிய இருபத்திரண்டும், அநுவாத முகத்தான் ஈண்டே நிகழப் |
|
|
|