இது, மேல் நிறுத்தமுறையானே அகப்பொருள் ஆவது இன்னது
என அதன் இயல்பு கூறுகின்றது.
இ-ள் : அகம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, மேல் கூறிப்
போந்த அறம் முதலாகிய மூவகைப்பொருள்களுள் இன்பம் என்னும்
இயல்பினை உடைத்தாகி, உள்ளத்தின்கண்ணே நிகழும் ஒழுக்கமாதலை
விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
ஒத்தஅன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற கூட்டத்தில்
பிறந்த இன்பம், அக்கூட்டத்தின் பின்னர், அவ்விருவரும் ஒருவருக்கு
ஒருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய்,
யாண்டும் உள்ளத்து