அணியியல் - உவமையணி்

103 

விரியுவமை

 உற்றபண்பு ஆதியின் உவமம் செய்வுழி மற்று அவை பெளிப்பட விரித்த
 விரிஉவமை வருமாறு :

    "பால்போலும் இன்சொல் பவளம்போல் செந்துவர்வாய்
     சேல்போல் பிறழும் திருநெடுங்கண் - மேலாம்
     புயல்போலும் கொடைக்கைப் புனல்நாடன் கொல்லி
     அயல்போலும் வாழ்வது அவர்"


 என வரும்.

     [உபமானம் உபமேயம் உவமைஉருபு பொதுத்தன்மை என்ற நான்கும் வெளிப்பட
 அமைவது விரிஉவமையாம். கார்மேகம் போன்ற கொடைக்கையை உடைய சோழனின்
 கொல்லிமலைச் சாரலின்கண் உள்ள தலைவி இன்சொல், செவ்வாய், நெடுங்கண்
 இவற்றை உடையாள்.

 உவமானம்   உபமேயம்   உவமைஉருபு   பொதுத்தன்மை
  பால்        சொல்      போலும்       இனிமை
  பவளம்      வாய்        போல்       செம்மை
  சேல்        கண்        போல்       பிறழ்தல்
  புயல்        கை        போலும்       கொடை

 என அந்நான்கும் விரித்துக் கூறப்பட்டவாறு காண்க.

    "உவமையும் உருபும் ஏதுவும் பொருளும்
     தவலருஞ் சிறப்பின் தாம்விரி வனவிரி".                   - மா, அ, 96 

    "விழுமிய குணம்முதல் விரிந்து வருவது
     விரியாம் என்மனார் மெய்உணந் தோரே".         - மு. வீ. பொ. அ. 94 

    "வருணியம் அல்பொருள் வாசகம் தன்மைஇந்
     நான்கும் விரிதர நவில்வது விரியே".                          - சந். 6