இதரேதரவுவமை
பொருள் உவமை ஆகியும் உவமை பொருள் ஆகியும் ஒருதொடர் இடை வரூஉம் இதரவிதர உவமை வருமாறு :
"களிக்கும் கயல்போலும் நின்கண்;நின் கண்போல்
களிக்கும் கயலும்; கனிவாய்த் - தளிர்க்கொடியே!
தாமரை போல்மலரும் நின்முகம்; நின்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்"
எனவும்,
ஒரே பாடலில் உபமேயத்தை உபமானமாகவும், உபமானத்தை உபமேயமாகவும் இருமுறை மாற்றிக் கூறுவது இதரவிதரமாம். இதரேதரம் என்பது இதரவிதரம் என்று கூறப்பட்டது;சந்திரோதயம் சந்திரவுதயம் எனப்படுவதுபோல. இதரேதரம், அந்நியோந்நியம், தடுமாற்றம் - ஒருபொருளன. இதனைத் தொல்காப்பியனார்.
"தடுமாறு உவமம் கடிவரை இலவே." - தெ.பொ. 310
என்ற நூற்பாவால் குறிப்பிடுவர். இது தடுமாறுவமை என்றும் பெயர் பெறும். (மா. அ. 101) வீரசோழியம் இதனை உறழ்ந்து வரலுவமை என்று பெயரிடும். (வீ. 159)
கயல்போல நின்கண்கள் களிக்கின்றன. நின் கண்கள் போலக் கயலும் களிக்கின்றது. கொடியே! தாமரைபோல நின்முகம் மலர்ந்துள்ளது. நின்முகம் போலத் தாமரையும் மலர்ந்துள்ளது - என்ற பாடலில்,
கயலும் தாமரையும் உலகு அறிந்த உபமானங்களாம்; கண்களும் முகமும் உலகு அறிந்த உபமேயங்களாம். இங்ஙன மிருந்தும், |
|
|