என வரும்.
[ஒரு பொருளை மற்றொரு பொருளுக்கு ஒப்பாகக் கூறுவதற்கு மனம்
விரும்புகின்றது என்று குறிப்பிடுவது வேட்கை உவமை ஆகும்.
"பூங்கொடியே" இங்ஙனம் கூறுவது நன்றோ தீதோ என்று ஆராயாது என்
நெஞ்சம்பள்ளத்தில் நெருங்கி வளரும் தாமரை மலரை நின் ஒளியுடைய முகத்திற்கு
ஒப்பாகக் கூற விரும்புகின்றது" - என்ற தலைவன் நயப்புரையில் தாமரையை
முகத்துக்கு ஒப்பாகக் கூறுவதன் காரணம் முகத்தின்மாட்டுத் தலைவன் கொண்ட
வேட்கையே என்பது விளக்கப்பட்டவாறு.
இது கருத்துவமை எனவும் பெயர்பெறும்