அணியியல் - உவமையணி்

129 

 நெகிழ்தல் - அறுதல்; நிறைகடாம் - நிறைந்த மதம்; சிந்தல் - பொழிதல்; கந்தம்
 - தறி; மலைதல் - சீறுதல்; நிலவுதல் - பொருந்துதல்; கவடு - புரோசைக்கயிறு;
 அசைதல் - பரிதல்.

     இனித் தென்றல்மேல் செல்லுங்கால், நளி-பெருமை; தடம் - பொய்கை; அல்லி -
 பூ; கள் - தேன்; நெகிழ்தல் - சோர்தல்; நிறை-ஒழுக்கம்; சிந்தல் - அழித்தல்; கந்தம்
 - விரை; அலைதல் - நரலுதல்; நிலவுதல் - நெருங்குதல்; கவடு - மலைக்கொம்பு;
 அசைதல் - அலைதல்,

     [சொற்களைப் பிரித்துச் சிலேடை கொள்வது பிரிமொழிச் சிலேடை. இப்பாடல்
 பிரிமொழிச் சிலேடை உவமையாய் யானைக்குத் தென்றல் உவமையாயினவாற்றைக்
 குறிப்பிடுவது காண்க.

    "புரந்தசொற் பொருவையும் பொருளையும் ஒன்ற
     இரண்டையும் சிலேடித்து இசைப்பது சிலேடை"          -வீர. உரை. 156] 

     அதிசய உவமை வருமாறு :

     நின்னுழையே நின்முகம் காண்டும்; நெடுந்தடம்
     தன்னுழையே தன்னையும் காண்குவம் - என்னும்
     இதுஒன்று மேயன்றி வேற்றுமை உண்டோ,
     மதுஒன்று செந்தா மரைக்கு-"

 என வரும்.

     [உயர்வு நவிற்சியாக உவமையைப் பொருளொடு புணர்த்துக் கூறுவது அதிசய
 உவமையாம்.

     "உன்னிடத்து உன்முகம் காணப்படுகிறது. தடாகத்தில் தாமரை காணப்படுகிறது.
 இவ்வாறு இருக்கும் இடத்தால் ஏற்பட்டுள்ள வேறுபாடேயன்றி, உன் முகத்திற்கும்
 தாமரைக்கும்

      17-18