இது மேலதற்கு ஒரு வழுஅமைதி கூறுகின்றது.
இ-ள் : உவமேய அடைக்கு உவமான அடை மிகப் புணர்த்தலும், உவமேய
அடைக்கு உவமான அடை குறையப்புணர்த்தலும், இழிந்த உவமையோடு உயர்ந்த
பொருளை உவமித்தலும், உயர்ந்த உவமையோடு இழிந்த பொருளை உவமித்தலும்,
முதலும் சினையும் தம்முள் மாறுபட உவமித்தலும், உயர்திணையும் அஃறிணையும
தம்முள் மாறுபட உவமித்தலும், ஆண் பாலும் பெண்பாலும் தம்முள் மாறுபட
உவமித்தலும், ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் தம்முள் மாறுபட உவமித்தலும், இவை
போல்வன பிறவேறுபாடுகளும் அடிப்பட்ட நெறி முறையால் பயன்படுதல் உளவாகிய
இடத்து வழுஎனக் களையப்படா; இயல்பு என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.
எனவே, பயப்பாடு இல்வழிக் களையப்படும் என்பதாம்.
வரலாறு :
"சாறுதலைக் கொண்டடெனப் பெண்ஈற்று உற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று, மாதோ!
ஊர்கொள வந்த பொருநரோடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே" - புறநா. 82
இதனுள் ஆர்புனைதெரியல் நெடுந்தகை போர்த்தொழிலுக்கு