இதனுள் உவமேய அடைக்கு உவமானஅடை மிக்க தனால் வருவது ஒரு பயப்பாடு
இன்மையின் வழுவாம் எனவும்,
[நீல நிறமுடைய புரும் வளைய கண்கள் செழித்து நோக்க மாலையை அணிந்த
கூந்தலால் சூழப்பட்ட நின்முகத்தை, கயல் பாய வாசனையைக் கவரும் களித்த
வண்டுகள் தன் அயலில் பாயும் தாமரை நிகர்க்கும் - என்ற இப்பாடலில் புருவம்
குனிப்ப, விழி மதர்ப்ப, மாலைக்குழல் சூழ்ந்த வதனம் கயல் பாய வாசம் கவரும்
களிவண்டு அயலில் பாயும் அம்போருகத்துக்கு உவமை யாகக் கூறப்பட்டடுள்ளது.
இந்த உவமைக்கு மூன்று அடைகள் புணர்த்ததனால் இரண்டு அடைகளுடைய
உபமேயத்திற்கு எந்த விதமான சிறப்பும் ஏற்பட வாய்ப்பு இன்மையால் இவ்வாறு
பயன்தாரா அடைகளை உபமானத்திற்குப் புணர்ப்பது வழு என்பதாம்.]
"நாட்டம் தடுமாறச் செவ்வாய் நலம்திகழத்
தீட்டரிய பாவை திருமுகம் -- காட்டுமால்
கெண்டைமீ தாட நறுஞ்சேய் இதழ்மிளிர
வண்டுசூழ் செந்தா மரை"
இதனுள் உவமேய அடைக்கு உவமானஅடை குறையப் புணர்த்ததனால் வருவது
ஒருபயப்பாடு இன்மையின் வழுவாம் எனவும்,