அணியியல் - உவமையணி்

165 

     [ஒரு பொருளை மற்றொரு பொருளாக உருவகம் செய்தும், உருவகம்
 செய்வதற்கு ஏலாப் பெற்றிகளை எடுத்துரைப்பது விரூபகமாகும், விரூபகம் - உருவகம்
 செய்தற்கு ஏலாதது. அம்புயம் மதிக்குத் தோற்கும்; குளத்தில் தங்கும்; முள் தங்கிய
 தண்டின்மேல் மலரும்; பகலில் மலர்ந்து இரவில் கூம்பும். ஆனால் இப்பெண்ணின்
 முகத்தாமரை மதிக்குத் தோற்காது; குளத்தில் தங்காது; முள் நிரம்பிய தண்டின்மேல்
 மலராது; பகல் இரவு என்ற இருபோதும் அழகாக மலர்ந்து காணப்படும் - என்ற
 இப்பாடலில், முகத்தைத் தாமரையாக உருவகம் செய்து தாமரைக்கு உள்ள
 குறைபாடுகள் முகத்திற்கு இல்லை என்று விளக்கியமை காண்க.

     இது தெற்றுருவகம் எனவும் பெயர் பெறும்.

    "எஞ்சிய பண்பில் இயையினும் ஓழிதொழில்
     செஞ்சொலால் கிளப்பது தெற்றுரு வகமே."              - வீ. உரை. 160 

     இது விரோத உருவகம் என்றும் வழங்கப்படும்.
     (விருத்த உருவகம்)                                    - மா. அ. 120] 

சமாதானவுருவகம்

     பாங்கினது உருவகப்படுத்தி அது பாங்கு இலாத் தீங்கு தரல் பிறிதின்
 எனச் செய்யும் சமாதான உருவகம் வருமாறு:

    "கைகாந்தள், வாய்குமுதம், கண்நெய்தல், காரிகையீர்!
     மெய்வார் தளிர், கொங்கை மென்கோங்கம் - இவ்வனைத்தும்
     வன்மைசேர்ந்து ஆவி வருத்துவது, மாதவம்ஓன்று
     இன்மையே அன்றோ எமக்கு?"

 என வரும்.

     [ஒரு பொருளைத் தனக்கு நன்மை செய்வதாக உருவகம் செய்து, அதுவே
 தனக்குத் தீங்கு தருவதாகக் கூறி, அங்ஙனம் தீங்கு தருவதற்கும் வேறு காரணம்
 உண்டு என்று கூறுவது