சமாதான உருவகம். இப்பெண்களின் கை காந்தட்பூ; வாய் குமுதப்பூ; கண்
நெய்தற்பூ; இவர் உடல் தளிராகும்; கொங்கை கோங்க மொட்டாகும். இத்தகைய
மெல்லிய பூக்களும் தளிரும் வன்மை பெற்று என் உயிரை வருத்துவதற்குக் காரணம்
யான் தவம்செய்யாமையேயாம் - என்று தலைவியும் தோழியும் ஒருங்கிருந்தவழியும்
சேட்படுக்கப்பட்ட தலைவன் தனக்குள் கூறிக்கொள்ளும் இப்பாடலில், கை முதலியன
நலம் தரும் பூக்களாக - உருவகம் செய்யப்பட்டும், அவற்றால் துன்பம் ஏற்படுவதற்கு
அவை காரணமல்ல; போகூழே காரணம் என்று கூறப்பட்டமை காண்க.
"சீரிய உருவகம் செப்பி,ன் பயன்தரக்
காரணம்கற் பித்தல் சமாதான மாகும்." -வீ..உரை.161
இதனை மாறன் அலங்காரம் நட்புருவகம் என்று குறிப்பிடும். -மா.அ.120]