"ஒருபொருள் அவயவம் எல்லாம் உருவகம்
ஆக்கல் அநேகாங் கப்பொருள் ஆகும்". - மு. வீ. பொ. 31]
முற்றுருவகம்
உற்ற உறுப்பு உறுப்பு உடையது எவ்வகையினும் முற்ற உருவகம் செயும் முற்று உருவகம் வருமாறு:
"விழியே களிவண்டு, மென்நகையே தாது,
மொழியே முருகுஉலாம் தேறல், - பொழிகின்ற
தேமருவு கோதைத் தெரிவைத் திருமுகமே,
தாமரைஎன் உள்ளத் தடத்து"
என வரும்.
[உறுப்புக்கள் உறுப்பி என்பனவற்றை ஒன்றும் எஞ்சாமல் உருவகம் செய்வது முற்றுஉருவகமாம். "தலைவியின் விழியே வண்டு, அவள் முறுவலே மகரந்தம், அவள் மொழியே தேன், அவள் திருமுகமே என் உள்ளமாகிய குளத்தில் அழகாக மலர்ந்திருக்கும தாமரை" - என்று தலைவன் தலைவி இயல்புபற்றிப்பாங்கனிடம் கூறும் இப்பாடலில், விழி, நகை, மொழி, முகம், தலைவன் உள்ளம் என்ற யாவும் உருவகம் செய்யப்பட்டவாறு. விழி, நகை, மொழி என்பன முகத்தின் உறுப்பின்பாற்படுவ ஆதலின் முகம் உறுப்பி ஆயிற்று. முதலும் சினையும். கூறுவார் கருத்துப்பற்றி மாறி அமைவன ஆதல் சொற்படலத்துக் கூறப்பட்டுள்ளது. உள்ளத்தடம் முதலாங்கால், முகத்தாமரை சினையாதலும் காண்க.
"சொற்ற அவயவ அவயவி இடம்பல
முற்ற உரைப்பது முற்றுஉரு வகமே". - வீ.. உரை. 169]
"எவ்வகையினும்" என்றதனாலே, அவயவஅவயவியே அன்றி,
"பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக்
குழவீநாறு எழுந்து, காளைக் கொழுங்கதிர் ஈன்று, பின்னாக
|
|
|