என இதனுள், பிணிசெய் பன்மா மேயாமற்பொருட்டு எனக் கருமத்தினையும் சீலவேலி
எனக் கருவியையும் ஒருங்கு உருவகம் செய்தலும் முற்றுஉருவகம் எனவும்,
[ஒரு பாடலில் கூறப்படும் செய்திகள் முழுவதையும் உருவகம் செய்தலும் முற்று
உருவகமாம்,
பவள வாயாகிய வயலில் நித்திலமாகிய விதையை விதைத்தலால் குழவி ஆகிய
நாறு தோன்ற, காளையாகிய கதிர் வெளிப்பட இறுதியில் கிழத்தன்மையாகிய
விளைவுதரும் வாழ்க்கையாகிய பயிரை, பிணியாகிய விலங்குகள் மேயாமல்
சீலமாகிய வேலியிட்டுப் பாதுகாத்தல் வேண்டும் - என்ற இப்பாடலில், வாழ்க்கையைப்
பயிராக உருவகம் செய்ததற்கு ஏற்ப, அதனோடு தொடர்புடையன யாவும் உருவகம்
செய்யப்பட்டவாறு.]