அணியியல் - உவமையணி்

171 

 என்பது ஒரு கூறு என்னும் பொருளது. இறைவனடி சேர்ந்தார் பிறவியாகிய கடலை
 நீந்துவர்; சேராதார் பிறவியாகிய கடலை நீந்தார் - என்ற பாடலில், பிறவியைக்
 கடலாக உருவகம் செய்ததற்கு ஏற்ப, இறைவனடியைத் தெப்பமாக உருவகம்
 செய்யாமை காண்க.

     அறிவு என்ற அங்குசத்தால் ஐம்பொறியையும் அடக்கி வைத்துக்கொள்பவன்
 மேல் உலகினை எய்தற்குரிய வாய்ப்பைப் பெறுவான் - என்ற பாடலில் அறிவை
 அங்குசமாக உருவகம் செய்ததற்கு ஏற்பப் பொறிகளை யானைகளாக
 உருவகம் செய்யாமை காண்க.

    "ஒருபொருள் உருவகம் செய்துமற்று ஒருபொருள்
     உருவகம் செய்யாது உரைத்துப் போதரல்
     ஏகதே சப்பொருள் என்மனார் புலவர்."               - மு. வீ. பொ. 32] 

அவயவவுருவகம்

     ஊக்கிய உறுப்பே உருவகம் ஆக ஆக்குதல் செய்யும் அவயவ உருவகம்
 வருமாறு:

    "புருவச் சிலைகுனித்துக் கண்அம்புஎன் உள்ளத்து
     உருவத் துரந்தார் ஒருவர்; - அருவி பொருங்கல்
     சிலம்பில், பினைஅல்குல் தேர்மேல்,
     மருங்குல் கொடிநுடங்க வந்து"

 என வரும்.

     [ஒரு பொருளின் அவயவங்களை எல்லாம் உருவகம் செய்து அப்பொருளை
 உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது அவயவ உருவகமாம். "அருவி நீர் மோதும்
 மலையில் அல்குலாகிய தேரின்மேல் இடையாகிய கொடி அசைய வந்து புருவமாகிய
 வில்லை வளைத்துக் கண்ணாகிய அம்பினை என் உள்ளத்தை உருவுமாறு ஒருவர்
 செலுத்திவிட்டார்" - என்று தலைவன் பாங்கனிடம் உற்றது