அணியியல் - உவமையும் உருவகமும்

179 

    "மழலைவாய் நல்வி, மதர்நெடுங்கண் மஞ்ஞை,
     குழலின் பொறைசுமந்த கொம்பர், - சுழல்கலவம்
     தாங்கிய அன்னம், தடங்கொங்கை ஆரமுதம்,
     தேங்கொள் கமலத் திரு"

 என்பது சிறப்பு உருவகத்தின்பாற்படும் எனவும்,

     [ஒரு பொருளைப் பலவாறு உருவகம் செய்து உருவகம் செய்யப்பட்ட உவமைக்கு
 இல்லாத சிறப்பியல்புகளை அடைகளாகப் புணர்த்து அப்பொருளைச் சிறப்பித்து
 உருவகம் செய்வது சிறப்பு உருவகத்தின்பாற்படும். அடைகள் சிறப்புத் தருதலோடு
 அமையாது உவமத்தை விலக்குவ போன்றும் உண்மையான், நேரே சிறப்புருவகம்
 என்னாது சிறப்பு உருவகத்தின்பாற்படும் என்றார். கமலத்திருவனைய இத்தலைவி
 மழலை பேசும் மான், அழகிய கண்களை உடைய மயில், கூந்தலாகிய பாரத்தைச்
 சுமக்கும் கொடி, கலாபத்தைத் தாங்கும் அன்னம், கொங்கைகளைச் சுமக்கும் அமுதம்
 என்னும் இப்பாடலில், நவ்வி, மஞ்ஞை, கொம்பர், அன்னம், அமுதம் என்ற
 உருவகங்கள் தலைவிக்கே உரிய சிறப்பான அடையடுத்து அமைக்கப்பட்டவாறு
 காண்க.]

    "வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க
     சொல்ஏர் உழவர் பகை"                                  - குறள் 872 

 என்பது ஏதுஉருவகத்தின்பாற்படும் எனவும்,

     [கருவியை ஏதுக்கண் அடக்கும் மரபு பற்றி, வில்லையே ஏராகக் கொண்டு
 பகைவர் உடலை உழும் வீரர்களின் பகைமையைத் தேடிக் கோடிலினும், சொல்லையே
 ஏராகக்கொண்டு உள்ளமாகிய வயலை உழும் புலவர்களின் பகை கோடல் கொடிது-
 என்ற கருத்துடைய இப்பாடலில், உழவர் என்ற உரவகத்திற்கு ஏற்ப வில் ஏர்,
 சொல் ஏர் என்ற கருவிகள் உழவிற்குப் பயன்படும் முகத்தான் காரணங்களாகி
 முறையே வீரரையும்,